அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 23 பேருக்கு 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பரிசுகளை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
நடப்பு கல்வியாண்டில், 9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும்,10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் 65 சதவீதமும் பாடங்களை நடத்த அறிவுறுத்தியுள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.