பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்காக 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன ரோபோவை, மயிலாடுதுறை நகராட்சிக்கு, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது.
விஷவாயுக்களை கண்டறியும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி ரோபோ மூலம், 11 ஆயிரத்து 80 பாதாள சாக்கடை இணைப்புகளில் உள்ள அடைப்புகளை எளிதில் அகற்றலாம் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ரோபோ இயந்திரத்தின் செயல்விளக்கம் குறித்து தூய்மை பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது