தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தனிநபர் இடைவெளி கடைபிடித்து குற்றால அருவிகளில் குளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிக்கும் போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு அருவிக்கும் பிரத்யேக குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.