செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீண்ட இழுபறிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் கைமாறிய புதையல்

Dec 13, 2020 07:48:56 PM

500 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் - உத்திரமேரூர் குழம்பரேஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல் நகைகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் குழம்பரேஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகளை வருவாய்த்துறை அனுமதியின்றி பொதுமக்களே தொடங்கியுள்ளனர். ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கருவறை நுழைவு வாயிலின் முன்புள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றிய போது, துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டையில் சுமார் 100 சவரன் அளவிலான ஆபரணங்களும், நாணயங்களும் இருந்தன. 

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புதையலை ஒப்படைக்க கிராமத்தினர் மறுத்தனர். அந்த நகைகளை கோவிலிலேயே வைத்து புதைக்க வேண்டும் என அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகளும் போலீசாரும் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் புதையலை ஒப்படைக்க மறுத்த ஊர்மக்கள், பேச்சுவார்த்தையை புறக்கணித்து பாதியிலேயே எழுந்து சென்றனர்.

இடையில் மூதாட்டி ஒருவர் சாமி வந்தவராக எழுந்து நகைகள் ஊரை விட்டு எடுத்துச் செல்லப்பட்டால், ஊர் மக்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கூறி ஆவேசமாக ஆடத் தொடங்கினார்.

புதையலை ஒப்படைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போலீசாரின் எச்சரிக்கைக்குப் பணிந்த ஊர்மக்களில் ஒரு தரப்பினர் நகைகளை எடுத்துச் செல்ல சம்மதித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் முன்னிலையிலேயே நகைகள் கணக்கெடுக்கப்பட்டு, பெட்டகம் ஒன்றில் வைத்து சீலிடப்பட்டது. மொத்தம் 70 தங்க பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடிதம் ஒன்றையும் அவர்களிடம் ஊர்மக்கள் எழுதி வாங்கிக் கொண்டனர்.

அதே நேரம் மற்றொரு தரப்பினர், கும்பாபிஷேகத்தின் போது நகைகளை கொண்டு வருவோம் என எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசிக்க வேண்டும் என கோட்டாட்சியர் கூறியதால், நகைப்பெட்டகம் வைக்கப்பட்ட போலீசாரின் வாகனத்தையும் கோட்டாட்சியர் வாகனத்தையும் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டாட்சியர் வித்யா, வாகனத்தை விட்டு இறங்கி 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வட்டாட்சியர் அலுவலகம் சென்று சேர்ந்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஆலோசனை நடத்திய கோட்டாட்சியர் வித்யா, கும்பாபிஷேகத்தின் போது நகைகள் கோவிலுக்கு எடுத்து வரப்படும் என ஊர்மக்களுக்கு எழுத்துப்பூர்வமான உறுதியை அளித்தார்.

 


Advertisement
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement