தற்காலிக பணிக்காலம் நிறைவடையவுள்ள அரசு செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்கு நிரந்தர பணி நியமனம் வழங்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி செவிலியர்கள் பொதுமக்கள் உயிரை பாதுகாத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்னும், கொரோனா தொற்று முழுமையாக நீங்காததால், செவிலியர்களின் சேவை மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் தேவை எனக்கூறியுள்ள ஸ்டாலின், தற்காலிக பணிக்காலம் நிறைவடையும் அரசு செவிலியர்கள் 4ஆயிரம் பேருக்கு நிரந்தர பணி நியமனம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.