அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழித் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ள 4 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது மத்திய அரசின் நிலைப்பாடு என்றும் தமிழக அரசின் நிலைப்பாடு அதுவல்ல என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக விழா ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரும் 15ஆம் தேதி முதல் ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.