ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் ஈடுபட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், தனியார் மருத்துவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்படுவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ துறைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடவும், இதனை நீதிமன்றம் தானாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என்றனர்.