லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்ததால், மருத்துவர்கள் அறிவுரைப்படி ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை எடுத்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்ததாகவும், மற்றபடி ஏதுமில்லை என்றார். மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு புறப்பட சொன்னார்கள் என கூறிவிட்டு, காரில் ஏறி மு.க. ஸ்டாலின் சென்றார்.