குவைத்தில் உள்ள, ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம், பேஸ்புக்கில் அமெரிக்க பெண் போன்று பழகியவர் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.
குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், சிவஹரிக்கு பேஸ்புக்கில் கிளாரா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பில் இருந்த கிளாரா, சென்னையில், தந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறு கூறியுள்ளார். நம்பிய சிவஹரி, ஆன்லைன் மூலம் 4 தவணைகளாக பணம் அனுப்பியுள்ளார்.
பணம் கிடைத்தவுடன், தனது பேஸ்புக் பக்கத்தை கிளாரா பிளாக் செய்துள்ளார். இதையடுத்து மோசடி நடைபெற்றதை உணர்ந்த சிவஹரி, தமிழக டிஜிபிக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, இராமநாதபுரம் எஸ்.பி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, அமெரிக்க பெண் போல் பழகி மோசடி செய்தவரை தேடி வருகின்றனர்.