தமிழ்நாட்டில், புதிதாக ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் ஆயிரத்து 315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு,14 பேர் உயிரிழந்தனர். 30 மாவட்டங்களில் கொரோனாவுக்கு, புதிதாக உயிரிழப்பு இல்லை.
சென்னையில் 347 பேருக்கு, புதிதாக, பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 9 மாவட்டங்களில், ஒருநாள் பாதிப்பு, ஒற்றை இலக்கத்தில், பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.