ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றிய அக்கா - தம்பி இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நசியனூரில் நந்தகுமார் என்பவனும் அவனது சகோதரி கிருஷ்ணவேணியும் சேர்ந்து கணிணி மையம் ஒன்றைத் தொடங்கி, அதில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 13 ஆயிரம் ரூபாய் வட்டியும் 3 ஆண்டுகள் முடிவில் அசலையும் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.
அதனை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்த நிலையில், ஒரு மாதம் மட்டும் வட்டியை கொடுத்துவிட்டு, சுமார் 82 லட்ச ரூபாயுடன் அக்கா தம்பி இருவரும் தலைமறைவாகினர். அண்மையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் கோவை நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.