தமிழகத்தில் குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளின் ஜி.பி.எஸ்., கருவிகளை மட்டுமே வாகனங்களில் பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டும் ஜிபிஎஸ் கருவி வாங்கி பொது போக்குவரத்து வாகனங்களில் பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு குறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.