நிவர் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விவரங்களின், முதற்கட்ட பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சுமார் 20 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில், நிவர் புயலால், சுமார் 5,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
562 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், நிவர்புயல் கரையை கடக்கும் போது வீசிய பலத்த காற்றின் காரணமாக 7,617 மின்கம்பங்களும், 221 டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.