தன் மீதான விசாரணைக்குழு அமைத்ததில் பல்கலைக்கழக வேந்தரான, தமிழக ஆளுநருக்கு விருப்பமில்லை என்று, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு முழுமையும் சுரப்பா தொடர்பானதாக இருப்பதால், அவரை வழக்கின் எதிர்மனுதாரராக அல்ல, இரண்டாம் மனுதாரராக நீதிமன்றம் ஏற்பதாக நீதிபதிகள் கூறினர்.
இருப்பினும் இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு அதிகாரமில்லை என்பதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றுவதாக, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.