ஈரோட்டில் குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த 3- பெண்கள் உட்பட 4- பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அகிலா என்ற செவிலியரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கோவையை சேர்ந்த சங்கரேஸ்வரி என்ற பெண், ஏழ்மை நிலையில் குழந்தையை பெற்று வளர்க்க முயலாத நிலையில் யாராவது உள்ளனரா என்று கேட்டுள்ளார்.
அப்படி குழந்தை கிடைத்தால் செவிலியர் அகிலாவுக்கும் குறிப்பிட்ட தொகையை தருவதாக கூறி பேசியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அகிலா இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி செவிலியர் அகிலா போன் செய்து குழந்தை ஒன்று விற்பனைக்கு இருப்பதாக அந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் வந்த நின்ற குழந்தை விற்பனை இடைதரகர் கும்பலை சேர்ந்த சங்கரேஸ்வரி உள்பட 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.