திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே மர்மமான முறையில் 3 ஆயிரத்து 200 வாத்துகள் உயிரிழந்தது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்த தனவேல் என்பவர் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று வாத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுவரை 3 ஆயிரத்து 200 வாத்துகள் இறந்துள்ளன.
இதுகுறித்து மீஞ்சூர் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் வாத்துகள் உயிரிழந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கனமழை, குளிர் தாக்கம் காரணமாக வாத்துக்கள் உயிரிழந்திக்கலாம் என கால்நடை துறையினர் தெரிவித்துள்ளனர்.