வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
எப்.சி.க்குச் செல்லும் வாகனங்கள், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, (ஜி.பி.எஸ். கருவி) போன்றவற்றை வாங்கிப் பொருத்த வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளதாக திமுக தலைவர், மற்றும், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கரூரில், செய்தியாளர்களிடம் பேசிய, போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம் மீதான, பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.