அடிப்படை முறையே சரி இல்லை என கூறியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை , மாற்றம் ஒவ்வொருவரிடமும் இருந்து தொடங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் கோரி,வழக்கறிஞர் ரத்தினம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தேர்தலில், ஒரு தொகுதிக்கு 50 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை அரசியல்வாதிகள் செலவு செய்யும் சூழல் உருவாகி உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், 10 ஓட்டு, 15 ஓட்டு என பேரம் பேசி ஓட்டுக்கு வாக்காளர்கள் பணம் வாங்குவதாகவும், பொதுமக்களே ஊழல்வாதி யாக மாறி விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.