தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், நவம்பர்-டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட போதும், கொரோனா அச்சுறுத்தலால் ஏராளமான மாணவர்கள் கல்லூரிக்குத் திரும்பாததால், கடந்த செமஸ்டர் தேர்வுகளைப் போலவே, இந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே சமயம், இறுதியாண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கல்லூரிகளில் நேரடியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.