ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பாலாற்றில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் காவேரிப்பாக்கம் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது.
இதனால், 31 அடி முழு கொள்ளளவு கொண்ட காவேரிப்பாக்கம் ஏரி 28 அடியை எட்டியதை அடுத்து, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்படுகிறது.
காவேரிபாக்கம் கரையோரம் உள்ள 57 கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் அங்கும் இங்கும் உலா வருகின்றனர்.