சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது தொடர்பாக இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் பக்கன்சிங் கலுஸ்தே தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அம்பேத்கரின் 64 -வது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு, மத்திய அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பக்கன்சிங் கலுஸ்தே, சேலம் உருக்காலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார்.