புயல், மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயிர் சேதத்தை கணக்கீட்டு அரசு உரிய இழப்பீடு வழங்கும் என்பதால், விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
காப்பீடு செய்யாதவர்களுக்கும், 33 சதவிகிதத்திற்கும் மேல் பயிர் சேதம் இருந்தால் வருவாய்த்துறை மூலம் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.