தமிழகத்தில் நிவர் புயல் நிவாரணப் பணிக்கு, முதல் கட்டமாக மத்திய அரசிடம் 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் கோரப்பட்டு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 94 பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வானங்கள் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆய்வு செய்யும் மத்திய குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, மத்திய அரசு முடிவு செய்யும் என தெரிவித்தார்.
கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதி சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.