வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி 24 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக - ஆந்திர எல்லையோரம் பெய்த கனமழையின் காரணமாக நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இன்று காலை ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் கற்பூரம் ஏற்றி தண்ணீரை வரவேற்றனர். உபரி நீர் செல்லும் கால்வாய் மாசடைந்து காணப்படுவதால் அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.