தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அக்கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.எஸ். அழகிரிக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கே.எஸ். அழகிரியுடன் தொடர்பில் இருந்தோரை கொரோனா பரிசோதனை எடுத்து கொள்ளும்படி கேட்டு கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.