கொடி நாளை முன்னிட்டு முப்படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையை காத்திடும் உயரிய சேவையில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் தியாக உணர்வுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நாளை கொடி நாள் அனுசரிக்கப்பட இருப்பதை முன்னிட்டு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், படைவீரர்களது தியாகத்தையும், சேவையையும் மனதார போற்றுகின்ற வேளையில்,அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை நல்குவதற்கு கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடவும் மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.