தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்பதாயிரம் எக்டேர் பரப்பில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் கால்வாய்களில் கரைமீறிப் பாயும் வெள்ளம் வயல்வெளிகளுக்குள் புகுந்துள்ளது. நான்கு நாட்களாகத் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் அழுகிப் போய்விடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சுப்பையன், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் விவசாயிகளுடன் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நீரில் மூழ்கிய பயிர்களைப் பார்வையிட்டார்.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 700 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.