திருப்பூர் அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4427கன அடி வீதமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று 77.79 அடியாக இருந்த அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 82.68 அடியாக உள்ளது.
நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதாலும், அமராவதி அணை தனது முழுகொள்ளளவான 90 அடியை எட்ட வாய்ப்புள்ளதாலும் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.