மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், மூன்று மாதங்களில் 900 தள்ளுவண்டி கடைகளை உற்பத்தி செய்து வழங்க 2 தனியார் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணொலி காட்சி மூலம் ஆஜரான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இரு நிறுவனங்களுக்கும் தள்ளுவண்டி கடைகளை அமைக்கும் பணிகளை வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 900 தள்ளுவண்டி கடைகளை இரு நிறுவனங்களுக்கும் தலா 450 கடைகள் வீதம் பகிர்ந்து அளிக்க உத்தரவிட்டனர்.
குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதமானால் கடையின் மதிப்பில் 10 சதவீத தொகையையும் பிடித்தம் செய்து கொள்ள மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.