ரஜினியுடனான கூட்டணி குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்தை அதிமுக மதிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்வது குறித்து பாஜக தலைமை தான் முடிவெடுக்கும் என எல்.முருகன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அரசியல் காரணங்கள் மற்றும் பரபரப்புக்காக கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார் என்றார்.