மதுரை மக்கள் இனி அண்டாக்களுடன் காத்திருக்காமல், வீட்டில் இருந்த படியே தண்ணீர் பிடிக்கலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
1295 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் நேரடியாக மதுரை மாநகராட்சிப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டத்தின் மாதிரி வடிவை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிக்க தண்ணீர் கொடுப்பவர்களுக்காக நம் மக்கள் எதையும் செய்வார்கள் என தெரிவித்தார்.