ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தப்புக் குண்டு பகுதியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையலாம் என தெரிவித்தார்
முன்னதாக தப்புக் குண்டு பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைய உள்ள இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.