இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டு விடும் என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இப்போது இரண்டு அல்லது 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட கிளினிகல் சோதனையில் உள்ளதாக கூறிய அவர், அடுத்த இரண்டு அல்லது 3 மாதங்களில் தடுப்பூசி போடும் பணி துவங்கும் என்றார்.
70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை தன்னார்வலர்கள் தடுப்பூசி சோதனைக்கு ஆட்பட்டுள்ளதாகவும், யாருக்கும் மோசமான பின்விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட சென்னை நபருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதற்கு பதிலளித்த அவர், அதற்கும் தடுப்பூசி சோதனைக்கும் தொடர்பு இல்லை என்றார்.