முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று நிவர் புயலின் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தது போல, தென் மாவட்ட மக்கள் புரெவி புயலின் போது ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
புரெவி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய 36 இடங்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
தென் மாவட்டங்களில் பல நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.தென்மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி வரையில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.