தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும், ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவங்கங்கை மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் 21 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதீத மழை பொழிவு இருக்கும் என்பதை குறிக்க இந்த 6 மாவட்டங்களுக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் என்ற சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்க ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.