புயல் வர உள்ள நிலையில் தென் மாவட்ட விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண் துறை வலியுறுத்தி உள்ளது.
சம்பா மற்றும் தோட்டக்கலை பயிர் செய்த விவசாயிகள், டிசம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாழை, மரவள்ளி, பப்பாளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க, பக்கவாட்டுக் கிளைகள், இலைகளை அகற்ற வேண்டும்.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் உடனடியாக மா மரங்களில் அறுவடை செய்ய வேண்டும். மாந்தோப்புகளுக்கு 2 நாட்களுக்கு முன்பும், தென்னந்தோப்புகளுக்கு 4 நாட்களுக்கு முன்பும் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
வயல்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.