காஞ்சிபுரம் மாவட்டம் நியாய விலை கடை ஒன்றில் இருந்து மூட்டையாக அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், உள்ளிட்டவை கடத்தப்படும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் மாதம்தோறும் அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் உள்ளிட்டவை வழங்கி வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கைலாசநாதர் மேட்டுத்தெருவில் எழுத படிக்க தெரியாத ஏழை எளிய மக்கள் நிறைந்து உள்ள பகுதியில் நியாயவிலைக் கடையிலிருந்து நாள்தோறும் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது.
படிக்காத ஏழை மக்கள் நிறைந்து உள்ள பகுதி என்பதால்பொருட்க்கள் அவர்களுக்கு வழங்கியது போல் கணக்கு காட்டிவிட்டு நியாய விலை கடை விற்பனையாளர், எடைபோடும் ஊழியர் இருவரும் சேர்ந்து அத்தியாவசியப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும், நியாயவிலைக் கடையிலிருந்து மூட்டை மூட்டையாக ரேஷன் பெருட்கள் ஆட்டோக்களில் கடத்திச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.