தங்கத்தின் விலைக்கு நிகராக தமிழகத்தில் மணல் விலை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போலி முகவரிகளைக் கொடுத்து ஆன்லைன் மணல் புக்கிங் செய்யும் இடைத்தரகர்கள், அதனை அதிக விலைக்கு விற்கின்றனர் என குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, ஒரு லோடு மணலின் விலை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறிய நீதிபதிகள், தங்கத்தின் விலைக்கு நிகராக மணல் விலை உள்ளதாகத் தெரிவித்தனர்.
அதிகாரிகள் உதவியுடன் ஆன்லைன் மணல் புக்கிங் செய்யும் இடைத்தரகர்கள், அதனை அதிக விலைக்கு விற்கின்றனர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு நிர்ணயித்த விலையில், பொதுமக்களுக்கு மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, டிசம்பர் 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.