தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று வருகிறது.
இந்த குழுவினர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. வேளாண்மை, நிதித் துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், மின்சாரம், ஊரக வளர்ச்சி, மீன்வளம், நீர் வளங்கள் ஆகிய மத்திய அரசின் ஏழு துறைகளின் செயலாளர்கள் தலைமையில் இக்குழு வருகிறது.
முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பிறகு மத்திய குழுவினர் மறுநாள் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதன் அடிப்படையில் குழுவானது மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கவுள்ளது. இந்த அறிக்கையின்படி, தமிழகத்துக்கு கூடுதல் நிவாரண நிதி உதவிகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.