குமரி கடலின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தால் உலக வரலாற்றில் தமிழர்களுக்கான மதிப்பு அதிகரிக்கும் என்று லெமுரிய உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் கடல்வழி ஆய்வாளர் பாலு தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், கடந்த 56 ஆண்டுகளாக குமரி மாவட்ட கடல்பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து 2007ஆம் ஆண்டு முதல் கவனித்து வருவதாகவும், குறிப்பாக தேங்காய்பட்டணம் கடல் பகுதியில் கடலரிப்பும், கன்னியாகுமரியில் கடல் உள்வாங்குதல் பற்றியும் ஆய்வு நடத்திவருவதாகவும் கூறினார்.