விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த கொத்தமல்லி தழைகளை விலை கொடுத்து வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விஜய் ரசிகர் மன்றத்தினர் வழங்கினர்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வேளான் விளை பொருள்கள் விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால், விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையுடன் வெண்டக்காய், கொத்தமல்லித் தழை போன்றவற்றை முல்லைப் பெரியாற்றில் கொட்டி வந்தனர்.
விவசாயிகளின் நிலையை அறிந்த தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையிலான விஜய் ரசிகர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சென்று கொத்தமல்லித் தழைகளை விலைக்கு வாங்கினர். பிறகு அவற்றை ஆற்றில் சுத்தம் செய்து தேனி வாரச் சந்தைக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
இது குறித்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், விவசாயிகள் தங்களின் வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து விளைவித்த வேளாண் பொருட்கள் வீணாகி விடக்கூடாது . விவசாயிகள் சோர்ந்து விடவும் கூடாது. அவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்யும் வகையிலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் இருந்து கொத்தமல்லி தழைகளை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினோம் '' என்கின்றர்.
இலவசமாக கொத்த மல்லி தழைகள் கிடைத்ததால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.