பணம் கட்ட முடியாதவர்களுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்ற நடவடிக்கை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
வங்கி கடன்தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனங் களிடம் ஒப்படைத்த தைத் திரும்பப் பெறக் கோரி, தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குண்டர்களை வைத்து கடன் தொகை வசூலிப்பதாக கூறிய நீதிபதிகள், இவ்வாறு செய்வதற்கு பதில் வங்கி கள் கடன் வழங்காமல் இருக்கலாம் என குறிப்பிட்டனர்.
ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள் வெளிநாடு களுக்கு தப்பிச் செல்வதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுவதாக வேதனை தெரிவித் தனர்.
வாடிக்கையாளர் கொடுத்த காசோலையை தூக்கி எறிந்ததாக திருச்சி - ஃபெடரல் வங்கி மேலாளர் மீதான புகாரில் சிசி டிவி காட்சிகளை சமர்ப்பிப்பதுடன்காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்த னர்.