திருவள்ளூர் அருகே கால்வாயில் பாய்ந்த வெள்ளத்தில் மீன்பிடித்தவர்களை போலீசார் விரட்டினர்.
அயப்பாக்கம் ஏரியில் இருந்து அம்பத்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வலைகள் மற்றும் சேலைகளை கொண்டு மீன்பிடித்தனர்.
வெள்ளப்பெருக்கிற்கு இடையிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தை உணராமல் அலட்சியமாக நீரில் இறங்கி நின்றிருந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரை கண்டதும் மீன் பிடித்தவர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.