பிரதமர் தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறுகிறார். ஆனால், இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என கேந்திர வித்யாலயா பள்ளிகளில் கட்டாயப்படுத்துவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை விமர்சித்துள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கப்படாது. ஆறாம் வகுப்பு முதல் வகுப்பிற்கு 20 மாணவர்களுக்கு மேல் விரும்பினால் தமிழ் கற்பிக்கப்படும் என்ற நிலை கேந்திர வித்யாலயாக்களில் உள்ளது.
இதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாகத் தான் தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது என தெரிவித்தனர். விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.