நிவர் புயலால் 36 வருவாய் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.
சென்னை எழிலகம் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநில பேரிடர் அவசர கட்டுபாட்டு மையத்தில் இரவு முழுவதும் புயல் நிலவரத்தை கண்காணித்து வந்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து உள்ளோம் என்று தெரிவித்தார். இதற்காக சிறப்பாக பணியாற்றிய அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நிவாரணங்களை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.