செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

புதுச்சேரி, மரக்காணம் இடையே கரையைக் கடந்தது நிவர் புயல்

Nov 26, 2020 07:59:09 AM

அதிதீவிரப் புயலான நிவர் புயல் புதுச்சேரி, மரக்காணம் இடையே பேரிரைச்சல் மற்றும் பெருங்காற்றுடன் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது.

அதி தீவிரப் புயலாக அறிவிக்கப்பட்ட நிவர் புயல் புதுச்சேரிக்கும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கும் இடையே நள்ளிரவில் கரையைக் கடந்தது. முதலில் புயலின் வெளிச்சுவர் கடலூர் கடல் பகுதியைத் தொட்டதும் அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து சென்ற நிவர் புயலால் சில இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது. இதனால் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து சாலைகளில் விழுந்தன.

பேரிரைச்சலுடன் புயல் கரையைக் கடந்ததால் புதுச்சேரி, கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

புயலின் வெளிச்சுவர் கடந்து சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அதன் மையப் பகுதி புதுச்சேரியின் வடக்குப் பகுதியில் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டது. புயலின் தாக்கத்தினால் முறிந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் சில இடங்கள் இரவு முழுவதும் இருளில் மூழ்கின. நிவர் புயல் கடல் பகுதியில் இருந்து 3 மணி நேரமாகக் கரையைக் கடந்த நிலையில் அடுத்த 6 மணி நேரம் வரை தாக்கம் நீடிக்குமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement
தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..
மூடப்படாத குடிநீர் பைப் பள்ளம் - விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
மதுரையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் கைவரிசை - சி.சி.டி.வி காட்சி வெளியீடு
புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு - திருமா
விசாரணைக்கு அழைத்த நபர் வர மறுத்ததால் அடித்து,உதைத்த காவலர் இடமாற்றம் ..
8 செ.மீ மழையை தாங்கும் வகையில் வடிகால் அமைப்பு உள்ளன - அமைச்சர் கே.என்.நேரு
பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..
பள்ளி மாணவியை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர்.!
திருச்சியில் 5 பள்ளிகளுக்கு 3ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement