செல்போன், கம்ப்யூட்டர் என எதில் ஆன்லைன் ரம்மி விளையாடினாலும், சைபர் பிரிவினரால் கண்டுபிடிக்கப்படும் வகையில் தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தடை செய்ய இயற்றப்பட்ட அவசரச்சட்ட நகலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை தீர்ப்பிற்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.