தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 904 பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக ஆயிரத்து 624 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில், புதிதாக 483 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
அரியலூர், கள்ளக் குறிச்சி , ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.