ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் தமிழக அரசின் அவரச சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இதன்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10000 ரூபாய் அபராதம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தடையை மீறி விளையாடினால் 5000 ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். தமிழக அரசின் இந்த அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.