அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா மீதான ஊழல், முறைகேடு புகார்கள் மீதான விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், பணி நியமனத்துக்கு 80 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் துணைவேந்தர் சுரப்பா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்த புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்தது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில், விசாரணை அதிகாரி கலையரசனும், உறுப்பினர்கள் 5 பேரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். உரிய முகாந்திரம் இருந்தால் சுரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.